புதன், 19 ஆகஸ்ட், 2009

அச்சடித்த பேப்பர்


அச்சடித்த பேப்பர்


எல்லாம் அதிக பலங் கொண்டு
ஆதிக்கம் செய்யுதென்றால


அதன் பெயர் பணம்


பண்டமாற்றுக்காலத்தில்


உண்டான சிக்கல்களை


உண்மையாய் தீர்ப்பதற்கு


உருவான அலகு அது பணம்


நாகரீக மாற்றத்தால்


நாமெல்லாம் வளர்ச்சிபெற்று


நாணயத்தின் காலடியில்


நாண்டு கிடக்கின்றோம்


பொருளியல் மாற்றத்தால்


மாறுகின்ற பொருளாதாரம்


முதலாளி வர்கமென்றும்


தொழிலாளி வர்கமென்றும்


நிர்னைக்கும் சக்தியாக
நிக்கின்றான்
நிதியரசன்


காலத்தின் தேவைக்கும்
காசும்
அவசியம்தான்


காசுமேல் காதல் கொண்டு


காலத்தை மாற்றுவான் ஏன்?


பட்டு மெத்தையின் மேல்


படுத்துறங்கும் பணக்காரர்


ஒட்டுத் துணிக்காய்


ஊரெங்கும் திரிகின்ற


உள்ளங்களை எண்ணாததேன்?


உள்ளவன் தருவான் என்று


உள்ளம் வெந்துகொண்டு


ஊமையாய் வாழவேண்டாம்


உழைப்பின் உச்சத்தால்


உள்ளவனை வெண்றிடுவோம்


உலகத்தை மாற்றிடுவோம்


படைப்பு- பார்தீ

அறிவொளிக் காலம்


அறிவொளிக் காலம் (Age of Enlightenment) என்பது, மேற்கத்திய மெய்யியலினதும், பண்பாட்டு வாழ்வினதும் ஒரு கால கட்டம் ஆகும். இக்காலத்தில் தான் முடிவு எடுப்பதற்கான முதன்மையான அடிப்படை பகுத்தறிவே என்னும் வாதம் முன்வைக்கப்பட்டது. ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளில் உருவாகி ரஷ்யா, ஸ்கண்டினேவியா உள்ளிட்ட ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு இவ்வியக்கம் பரவியது. பொதுவாக கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டை அறிவொளிக் காலம் என்று வரலாற்றறிஞர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால், இந்நூற்றாண்டில் தான் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஒரு தனிமனிதனின் பறிக்கமுடியாத உரிமைகள், மனிதர்களின் சமூக ஒப்பந்தத்தின் (Social Contract) விளைவாக உருவாக்கப்பட்ட அரசு மற்றும் அரசனின் கடமைகள் போன்ற கருத்துக்கள் தத்துவத் தளத்தில் இயங்குவதோடு மட்டுமல்லாமல் மக்களின உணர்வுகளையும் ஆட்கொள்ளத் தொடங்கின. அதன் விளைவாகவே பிரெஞ்சுப் புரட்சியும், அமெரிக்கப் புரட்சியும் உருவாகி சர்வாதிகார மற்றும் அடக்குமுறை ஆட்சிமுறைகள் தூக்கி எறியப்பட்டன. ஆனால் அறிவொளிக் காலத்திற்கான அடிப்படைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே போடப்பட்டன.
இக் காலகட்டத்தின் மெய்யியல், அறிவுசார் வளர்ச்சிகளும் நெறிமுறை மற்றும் சமூக சீர்திருத்தம் போன்றவற்றில் அவற்றின் தாக்கங்களும், அரசைப் பலப்படுத்தல், மையப்படுத்தல், நாட்டின நாடுகளின் முதன்மை, மக்களுக்குக் கூடிய உரிமைகள் போன்றவை தொடர்பான வேட்கையை உருவாக்கின. அத்துடன் உயர் மட்டத்தினரதும்; திருச்சபைகளதும்; பிற்போக்குத் தன்மை, மூடநம்பிக்கை கொண்ட சக்திகளையும் அகற்றுவதற்கான முயற்சிகளும் கூட மேற்கொள்ளப்பட்டன.
விக்கிபீடியாவில் இருந்து.